egg potato | உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட்

27g புரோட்டீன் இருக்க மார்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி, வெயிட் லாஸ்க்கு ஏற்ற உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட், இதோட கலோரி 513 இருக்கதால இத நைட் டின்னர்க்கும் எடுத்துக்கலாம்,

  • குறைந்த அளவு  கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட்

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – 1 (நீட்டமாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • முட்டை – 3
  • தேங்காய் எண்ணெய் – 1Tbsp
  • மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • ஆர்கானோ – 1/2 டீஸ்பூன்
  • சீஸ் – தேவையான அளவு

செய்முறை:

  1. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. ஒரு பௌலில் முட்டை, ஆர்கானோ, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. வதக்கிய உருளைக்கிழங்கு கலவையை முட்டை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்த முட்டை கலவையை ஊற்றி,சீஸ் சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு வேக வைக்கவும்.
  7. சுவையான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட் தயார். 

வெறும் வெங்காயம் மட்டுமே சேர்த்து ஆம்லேட் செய்றதுக்கு பதிலா, இப்டி ஒரு தடவை டிரை பண்ணுங்க டேஸ்ட் வேரலெவல்ல இருக்கும்.

Total Macro
Protein: 27 g (30.43%)
Carb: 32 g (35.65%)
Fat: 31 g (33.93%)
Fiber: 9 g
Calories: 513


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *