Overnight Peanut Oats | ஓவர் நைட் பீனட் ஓட்ஸ்

356 கலோரில வெயிட் லாஸ்க்கு ஏற்ற சூப்பாரான ஓவர்நைட் வேர்க்கடலை ஓட்ஸ் ஸ்னாக்ஸ் ரெசிபி, இதுல 12g புரோடின் மட்டுமில்ல 9g ஃபைபரும் இருக்கு,

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
  • சியா விதை – 1/2 டீஸ்பூன்
  • தேன் – 1 டேபிள்ஸ்பூன்
  • வறுத்த வேர்க்கடலை – 20 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • வாழைப்பழம் – 1 (நறுக்கியது)
  • பாதாம் பருப்பு – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

  1. ஒரு கண்ணாடி ஜாரில் ஓட்ஸ், சியா விதை, தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. ஒரு பிளண்டரில் வறுத்த வேர்க்கடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, ஓட்ஸ் கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. ஜாரை மூடி, இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  4. மறுநாள் காலை, ஜாரை திறந்து, ஒரு பௌலில் ஓட்ஸ் கலவையை ஊற்றி, வாழைப்பழம், பாதாம் பருப்பு சேர்த்து பரிமாறவும்.

சியா விதை நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்தது . ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

Total Macro
Protein: 12 g (16.82%)
Carb: 40 g (59.12%)
Fat: 16 g (24.07%)
Fiber: 9 g
Calories: 356


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *