23g புரோடின் கொண்ட சப்பாத்திக்கும் தோசைக்கும் எடுத்துக்குற ஒரு ஹெல்தியான சைடிஸ் ரெசிபி, இந்த சைடிஸ் 443 கலோரி தான்.
உடல் எடையை குறைக்க ஏற்ற பன்னீர் புர்ஜி
தேவையான பொருட்கள்:
- பன்னீர் – 100 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 1 Tblp
- பூண்டு – 5 பல் (நறுக்கியது)
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி பவுடர் – 1/2 டீஸ்பூன்
- சிக்கன் மசாலா – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
செய்முறை:
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி பவுடர், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கொதித்ததும், துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- இரண்டு மூன்று நிமிஷம் வேக வைத்து, இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பன்னீர் புஷ்ரியில் அதிகளவு புரோட்டின் உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது, மேலும் இதில் குறைந்தளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திறனை அதிகபடுத்துகிறது.
Total Macro
Protein: 23 g (31.25%)
Carb: 22 g (30.06%)
Fat: 29 g (38.69%)
Fiber: 10 g
Calories: 443

Leave a Reply