Broken wheat Khichadi | உடைந்த கோதுமை கிச்சடி

247 கலோரில, 7g புரோடின் உள்ள மார்னிங் நாம ஈஸியா செய்யக்கூடிய கோதுமை ரவா கிச்சடி ரெசிபி, இதுல கொழுப்பும் சர்க்கரையும் இல்லாததால உடல் எடையை குறைக்க ரொம்பவே ஹெல்ப் பண்ணும்

தேவையான பொருட்கள்:

  • கோதுமை ரவை – 30 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • மிளகு – சிறிதளவு
  • சீரகம் – சிறிதளவு
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • பீன்ஸ் – 20கிராம்
  • கேரட் – 1 (நறுக்கியது)
  • பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊறவைத்தது)
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

  1. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையை சேர்த்து 2-3 நிமிஷம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  3. தாளித்ததில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அடுத்து, மஞ்சள் தூள், பீன்ஸ், கேரட், பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  6. பாசிப்பருப்பு வெந்ததும், வறுத்த கோதுமை ரவையை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  7. கிச்சடி நன்கு கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
  8. இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இந்த கிச்சடியில் அதிகளவு நார்ச்சத்து இருக்கதால செரிமானத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதுக்கூடவே சன்னா கிரேவி எடுத்தா ஹெல்தியானா மார்னிங் டிபன் ரெடி

Total Macro
Protein: 7 g (13.67%)
Carb: 39 g (73.74%)
Fat: 7 g (12.59%)
Fiber: 5 g
Calories: 247


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *