“575 காலோரி, 23g புரோட்டீன் உள்ள சூப்பரான புரோட்டின் மில்க் – மார்னிங் டீக்கு பதிலா இந்த புரோட்டின் மில்கை ஒரு நாள் ட்ரை செய்து பாருங்க, இது வெயிட் லாஸ்க்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணும்.”
ஹோம்மேட் புரோட்டின் மில்க் செய்முறை
தேவையான பொருட்கள்:
- பாதாம் பருப்பு – 15 கிராம்பாதாம் பருப்பு
- பிஸ்தா பருப்பு – 15 கிராம்
- முந்திரி பருப்பு – 15 கிராம்
- பூசணி விதை – 15 கிராம்
- ஏலக்காய் – 2
- பால் – 200 மில்லி
செய்முறை:
- ஒரு வாணலியில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு, பூசணி விதை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்த நட்ஸ் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
- பால் நன்கு கொதித்ததும், அரைத்து வைத்த நட்ஸ் கலவையை சேர்த்து கிளறி விடவும்.
- 5 நிமிடம் கொதித்த பின், அடுப்பை அணைத்து வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.
இந்த புரோட்டின் மில்க் கண்டிப்பாக உங்கள் வெயிட் லாஸ்க்கு சப்போர்ட்டிவாக இருக்கும்.
Total Macro
Protein: 23 g (24.94%)
Carb: 25 g (27.85%)
Fat: 43 g (47.21%)
Fiber: 7 g
Calories: 575

Leave a Reply