Biotin Drink | பயோட்டின் பானம்

463 கலோரி ல, 15g புரோட்டீன் இருக்க ஒரு சூப்பரான பயோடின் ட்ரிங்க்,மார்னிங் பிரேக்பாஸ்ட் எடுத்துக்காதவங்ககூட இத குடிச்சாலே போதும்.

தேவையான பொருட்கள்:

  • முந்திரி பருப்பு – 5கிராம்
  • பாதாம் பருப்பு – 5கிராம்
  • வால்நட் – 3
  • வேர்க்கடலை – 10கிராம்
  • வெள்ளை எள்ளு – 10 கிராம்
  • பேரிச்சம் பழம் – 5
  • சியா விதைகள் – 1 டீஸ்பூன்
  • ஆளி விதைகள் – 1 டீஸ்பூன்
  • பூசணி விதைகள்- 10 g
  • வாழைப்பழம் – 1
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  1. ஒரு பௌலில் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, வால்நட், சூரியகாந்தி விதைகள், பாகற்காய் விதைகள், வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, பேரிச்சம் பழம், சியா விதைகள், ஆளி விதைகள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு, இந்த நட்ஸ் மற்றும் விதைகளை ஒரு கிளாஸில் சேர்த்து, வாழைப்பழத்தை நறுக்கி சேர்க்கவும்.
  3. இதை ஒரு ஹேண்ட் பிளெண்டர் பயன்படுத்தி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. இந்த ட்ரிங்கை ஒரு கிளாஸில் ஊற்றி, மேலே ஆளி விதைகள் தூவி பரிமாறவும்.

பயோடின் ட்ரிங்கின் நன்மைகள்:

  • இந்த ட்ரிங்க் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது.
  • இது ஹார்மோன் சுரப்பை சீராக வைக்கிறது.
  • இது சோர்வை போக்குகிறது.

நீங்களும் இந்த ட்ரிங்கை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு பிடிக்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் இது ரொம்பவே நல்லது

Total Macro
Protein: 15 g (18.52%)
Carb: 34 g (43.73%)
Fat: 30 g (37.75%)
Fiber: 13 g
Calories: 463


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *