287 கலோரில ரொம்ப ஈஸியான ரவா தோசை ரெசிபி, இதுல 7 கிராம் புரோட்டீனும் இருக்கு, அரிசி மாவு தோசைக்கு பதிலா இத ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க
ரவா தோசை செய்முறை
தேவையான பொருட்கள்
- ரவை – 50 கிராம்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 25 கிராம் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு கடாயில் ரவையைப் போட்டு, லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைப் போட்டு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு தோசைக்கல்லை சூடேற்றி, அதில் கரைத்து வைத்த மாவை ஊற்றி, தேங்காய் எண்ணெய் தடவவும்.
- இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா தோசை தயார்.
குறிப்புகள்
- ரவையை அதிகமாக வறுக்காமல், லேசாக வறுக்கவும்.
- ரவா தோசைக்கு புதினா சட்னி, கார சட்னி போன்றவற்றை சேர்த்து பரிமாறலாம்.
Total Macro
Protein: 7 g (10.36%)
Carb: 52 g (80.82%)
Fat: 6 g (8.82%)
Fiber: 3 g
Calories: 287

Leave a Reply