Moong Dal Idly – மூங் தால் இட்லி

வெறும் 187 கலோரில 7g புரோட்டின் கொண்ட ரொம்ப சுவையான ஒரு மார்னிங் டிபன் ரெசிபி, இது கூடவே பச்சை பட்டாணி கிரேவி எடுத்தா புரோட்டின் ரிச்சான டிஷ் ரெடி,

மூங் தால் இட்லி செய்முறை

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு – 70 கிராம்
  • தயிர் – 50 கிராம்
  • பச்சை மிளகாய் – 1
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – சிறுதுண்டு 
  • உப்பு – தேவையான அளவு 
  • கேரட் – 25 கிராம் (துருவியது)
  • கொத்தமல்லி – சிறிதளவு 
  • தேங்காய் எண்ணெய் – 1/4 டீஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

  1. பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு, தயிர், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை சேர்த்து அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  5. மாவை நன்கு கிளறி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, வேக வைக்கவும்.
  6. இட்லி நன்றாக வெந்ததும், எடுத்து, தக்காளி சட்னி அல்லது வேறு ஏதாவது சட்னியுடன் பரிமாறவும்

பாசிப்பருப்பு சாம்பார் தவிர்த்து இந்த மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப ஹெல்தியாவும் இருக்கும் எப்பவும் சாப்பிடுற இட்லியோட கம்பேர் பண்ணும்போது இது ரொம்ப டேஸ்டியா இருக்கும்.

Total Macro
Protein: 7 g (21.27%)
Carb: 18 g (51.78%)
Fat: 9 g (26.95%)
Fiber: 5 g
Calories: 187


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *