250 கலோரில 8g புரோட்டின் இருக்க ஓட்ஸ் யூஸ் பண்ணி பிரிப்பேர் செய்ற ஒரு ஸ்பைசியான மசாலா ஓட்ஸ் ரெசிபி தான் இப்ப நம்ம பாக்க போறோம்.
தேவையான பொருட்கள்
- கோக்கனட் ஆயில் -1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் -1/4 டீஸ்பூன்
- வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1(பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை – சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
- உப்பு(தேவையான அளவு)
- பச்சை பட்டாணி -20 கிராம்
- பீன்ஸ் -25 கிராம்
- கேரட் -25 கிராம்
- முட்டைக்கோஸ் -10 கிராம்
- மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
- மேகி மசாலா – 1/4 டீஸ்பூன்
- ஓட்ஸ் -25 கிராம்
செய்முறை
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெங்காயம்,தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- உப்பு சேர்த்து வெங்காயம், தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா,மேகி மசாலா சேர்த்து கிளறிவிடவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- காய்கறிகள் ஓரளவு வெந்ததும் ஓட்ஸ் சேர்த்து கிளறிவிடவும்.
- தண்ணீர் நன்கு வற்றும் வரை வேகவிட்டு இறக்கவும்.
சுவையான மசாலா ஓட்ஸ் தயார்
Total Macro
Protein: 8 g (16.28%)
Carb: 34 g (66.04%)
Fat: 9 g (17.68%)
Fiber: 10 g
Calories: 250.

Leave a Reply