345 கலோரில 9g புரோட்டின் இருக்கிற ரொம்பவே ஹெல்தியான டிபன் ரெசிபி தான் பாக்க போறோம், நார்மலா நம்ம எடுக்குற தோசைக்கு பதிலா ஒரு நாள் இந்த கம்பு தோசை ட்ரை பண்ணி பாருங்க
தேவையான பொருட்கள்:
- கம்பு மாவு – 1 கப்
- அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
- தயிர் – 50 கிராம்
- உப்பு – 1/4 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
- ஒரு பௌலில் கம்பு மாவு, அரிசி மாவு, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- தோசைக்கல் சூடானதும், கரைத்து வைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி, தேங்காய் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைக்கவும்.
- அருமையான,சுவையான கம்பு தோசை தயார்.
சுவை கூட்ட சில குறிப்புகள்:
- தோசைக்கு, வேர்க்கடலை சட்னி அல்லது தக்காளி சட்னி சேர்த்து பரிமாறலாம்.
- தோசை உடன், தயிரை சேர்த்து சாப்பிடலாம்.
இந்த கம்பு தோசை ஒரு லோ கலரி, ஹை புரோட்டின் உணவு. இது வெயிட் லாஸ்க்கு ஏற்றது.
Total Macro
Protein: 9 g (11.96%)
Carb: 55 g (74.72%)
Fat: 10 g (13.32%)
Fiber: 6 g
Calories: 345

Leave a Reply