green peas paneer gravy | பச்சை பட்டாணி பனீர் குழம்பு

352 கலோரில 16 g புரோட்டின்  வர மாதிரி சப்பாத்தி, இட்லி, போன்ற  பிரேக்ஃபாஸ்ட் மட்டும் இல்லாம ரைஸ் கூடவும் யூஸ் பண்ற மாதிரி இருக்கக்கூடிய ஒரு டிஷ் தான் இந்த பச்சை பட்டாணி பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் – 50 கிராம் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • பச்சை பட்டாணி – 25 கிராம் (வேக வைத்தது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – சிறு துண்டு( நறுக்கியது)
  • பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
  • முந்திரி பருப்பு – 15 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

  1. ஒரு கடாயில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  2. அதே கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதக்கிய வெங்காயம், தக்காளி கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  4. மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, சோம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. வதக்கிய சோம்பு, பச்சை மிளகாய் கலவையில் பேஸ்ட் செய்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  6. கொதித்ததும், வேக வைத்த பச்சை பட்டாணி மற்றும் வதக்கி வைத்த பன்னீர் சேர்த்து கிளறி விடவும்.
  7. இறுதியாக, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

இந்த பச்சை பட்டாணி பன்னீர் கிரேவி ஒரு லோ கலரி, ஹை புரோட்டின் உணவு. இது வெயிட் லாஸ்க்கு ஏற்றது.

Total Macro
Protein: 16 g (28.04%)
Carb: 15 g (27.35%)
Fat: 25 g (44.62%)
Fiber: 5 g
Calories: 352


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *