Oats Paneer Chilla | ஓட்ஸ் பனீர் சில்லா

467 கலோரில 21 கிராம் புரோட்டின் இருக்க மாதிரி  ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய ஓட்ஸ் பன்னீர் சில்லா ரெசிபி தான் நாம இப்ப பாக்க போறோம்,  இதுல 12 கிராம் பைபர் இருக்கறதுனால டைஜெஷன் சக்தியை அதிகப்படுத்தும்,

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் – 50 கிராம்
  • கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • கேரட் – 1/2 கப் (துருவியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பன்னீர் – 50 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 

செய்முறை:

  1. ஒரு பௌலில் ஓட்ஸை தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த ஓட்ஸை ஒரு மிக்ஸிங் பௌலில்  சேர்த்து, கடலை மாவு, வெங்காயம், குடைமிளகாய், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  3. ஒரு தோசைக்கல் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி,சூடானதும் கரைத்து வைத்த மாவை சின்ன சின்ன வட்டமாக ஊற்றி, நடுவில் பன்னீர் துண்டுகளை வைத்து, இருபுறமும்  நன்கு வேகவைத்து  எடுத்தால், சுவையான ஓட்ஸ் பன்னீர் சில்லா தயார்.

 எப்பவுமே ஒரே மாதிரியான டிஷ் ட்ரை பண்றதுக்கு பதிலா  இது மாதிரி புதுசு புதுசா ட்ரை பண்ணா அதுல உள்ள பெனிபிட்ஸ் நமக்கு கிடைக்கும் அதே நேரத்தில் போர் அடிக்காமலும் இருக்கும்

Total Macro
Protein: 21 g (23.34%)
Carb: 51 g (55.12%)
Fat: 20 g (21.54%)
Fiber: 12 g
Calories: 467


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *