317 கலோரில 9g இருக்க மில்லட் கிச்சடி ரெசிபி தான் இப்ப நம்ம பாக்க போறோம், எப்பவுமே ரவா உப்புமா, கோதுமை உப்புமா எடுத்துக்கிறத விட இந்த மாதிரி மில்லட் கிச்சடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க, இதுல எந்த அளவுக்கு ப்ரோடீன் இருக்கோ அதே அளவுக்கு பைபர் இருக்கு
தேவையான பொருட்கள்:
- மில்லட் – 25 கிராம்
- பாசிப்பருப்பு – 25 கிராம்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- பீன்ஸ் – 1/2 கப் (நறுக்கியது)
- கேரட் – 1/2 கப் (நறுக்கியது)
- இஞ்சி – சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை – சிறிதளவு
- நெய் – 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும், சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி விடவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்ததும், ஊறவைத்த பாசிப்பருப்பு மற்றும் மில்லட்,உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- அடுப்பை குறைவான தீயில் வைத்து, பருப்பு நன்கு வெந்ததும், கருவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவை கூட்ட சில குறிப்புகள்:
- கிச்சடிக்கு, புதினா சட்னி அல்லது தக்காளி சட்னி சேர்த்து பரிமாறலாம்.
Total Macro
Protein: 9 g (13.89%)
Carb: 39 g (63.2%)
Fat: 14 g (22.91%)
Fiber: 10 g
Calories: 317

Leave a Reply