Black chickpea brown rice pulao | கருப்பு கொண்டைக்கடலை பழுப்பு அரிசி புலாவ்

வெறும் 295 கலோரி ல ஹெல்தியான ஒரு ரெசிபி தான் இந்த கருப்பு கொண்டைக்கடலை பழுப்பு அரிசி புலாவ், இதுல 11g ஃபைபர், 9g புரோட்டீன் இருக்காதால கான்ஸ்டிபுயூஷன் பிராப்ளம் இருக்கவங்க கண்டிப்பா இத டிரை பண்ணி பாருங்க

தேவையான பொருட்கள்:

  • கருப்பு கொண்டைக்கடலை – 25 கிராம்
  • பழுப்பு அரிசி – 25 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • முட்டைக்கோஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 2 1/2 கப்
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

  1. ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
  3. ஏற்கனவே ஊறவைத்திருந்த கருப்பு கொண்டைக்கடலை, பழுப்பு அரிசி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  4. இதனுடன் கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறி விட்டு, 2 1/2 கப் தண்ணீர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து விடவும்.
  5. குக்கரை மூடி, மூன்று விசில் விட்டு எடுத்தால், சுவையான கருப்பு கொண்டைக்கடலை பழுப்பு அரிசி புலாவ் தயார்.

இந்த கருப்பு கொண்டைக்கடலை பழுப்பு அரிசி புலாவ் ஒரு குறைந்த கேலரி. இது ஒரு பைபர் ரிச் உணவு, இது வெயிட் லாஸ்க்கு ஏற்றது.

Total Macro
Protein: 9 g (14.92%)
Carb: 45 g (71.75%)
Fat: 8 g (13.32%)
Fiber: 11 g
Calories: 295


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *