Besan Toast | பெசன் டோஸ்ட்

367 கலோரில 16g புரோடின் வரமாதிரி ரொம்பவே ஈஸியான ஒரு பிரேக்பாஸ்ட் ரெசிபி, இத ஸ்னாக்ஸாவும் எடுத்துக்கலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான பசான் பிரெட் டோஸ்ட்.

தேவையான பொருட்கள்:

  • பிரட் – 2 துண்டுகள்
  • கடலை மாவு – 50 கிராம்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  3. ஒரு தோசைக்கல் அல்லது வாணலியில் எண்ணெய் தடவி, அதில்  பேஸ்ட் செய்த மாவை பிரட் துண்டுகளின் இரண்டு பக்கமும் நனைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும்.
  4. சூடாக பரிமாறவும்.

Total Macro
Protein: 16 g (20.29%)
Carb: 56 g (68.98%)
Fat: 9 g (10.73%)
Fiber: 9 g
Calories: 367


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *