Soya Chunks Gravy | சோயா சங்க்ஸ் கிரேவி

காய்கறியில்லாத சமயம் இதுபோல ஒரு கிரேவி செய்தாலே போதும், இதுல 15g புரோடின் இருக்கு, இதோட கலோரின்னு பாத்தா 305 தான். இந்த சோயா சங்க்ஸ் கிரேவி சப்பாத்திக்கும். சாததுக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • வேக வைத்த சோயா சங்க்ஸ் – 20 கிராம்
  • துருவிய தேங்காய் – 25 கிராம்
  • பெருஞ்சீரகம் – ¼  டீஸ்பூன்
  • மிளகு – ¼ டீஸ்பூன்
  • சீரகம் – ¼ டீஸ்பூன்
  • இஞ்சி – 1 துண்டு
  • பூண்டு – 3 பல்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
  • கரம் மசாலா – ½ டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு  (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

  1. ஒரு வாணலில் தண்ணீர் ஊற்றி, சோயா சேர்த்து வேக வைக்கவும்.
  2. இன்னொரு வாணலில் துருவிய தேங்காய், பெருஞ்சீரகம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து வறுத்து, பேஸ்ட்டாக  அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  4. வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி,தேவையான அளவு உப்பு   சேர்த்து வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா,வேக வைத்த சோயா சங்க்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கொதித்ததும், அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  8. இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

பரிமாறவும்:

இந்த கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாறலாம்.

Total Macro
Protein: 15 g (26.95%)
Carb: 22 g (41.06%)
Fat: 17 g (31.99%)
Fiber: 11 g
Calories: 305


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *