வெறும் 197 கலோரில சூப்பாராவும் 16g புரோடின் இருக்கமாதிரியும் ரொம்பவே ஈஸியா செய்யிற ஒரு டேஸ்ட்டான பச்சை பட்டாணி மற்றும் முட்டை வெள்ளை கரு கிரேவி ரெசிபி, இது டிபனுக்கும் ரைஸ்கக்கும் சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கி யது)
- வேகவைத்த முட்டை வெள்ளை கரு – 3 (சிறியதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
- கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – சிறிதளவு
- தக்காளி பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- புதினா – சிறிதளவு (நறுக்கியது)
- பச்சை பட்டாணி – 25 கிராம்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
- சிக்கன் மசாலா – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
- பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும்.
- கொதித்ததும், கட் பண்ணி வச்சிருக்க முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பரிமாறவும்:
கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாறலாம்.
Total Macro
Protein: 16 g (40.98%)
Carb: 15 g (39.23%)
Fat: 8 g (19.78%)
Fiber: 8 g
Calories: 197

Leave a Reply