Rava Dosa | ரவா தோசை

287 கலோரில ரொம்ப ஈஸியான ரவா தோசை ரெசிபி, இதுல 7 கிராம்  புரோட்டீனும் இருக்கு, அரிசி மாவு தோசைக்கு பதிலா  இத ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க

ரவா தோசை செய்முறை

தேவையான பொருட்கள்

  • ரவை – 50 கிராம்
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 25 கிராம் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி – சிறிதளவு 
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

  1. ஒரு கடாயில் ரவையைப் போட்டு, லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைப் போட்டு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு தோசைக்கல்லை சூடேற்றி, அதில் கரைத்து வைத்த மாவை ஊற்றி, தேங்காய் எண்ணெய் தடவவும்.
  5. இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா தோசை தயார்.

குறிப்புகள்

  • ரவையை அதிகமாக வறுக்காமல், லேசாக வறுக்கவும்.
  • ரவா தோசைக்கு புதினா சட்னி, கார சட்னி போன்றவற்றை சேர்த்து பரிமாறலாம்.

Total Macro
Protein: 7 g (10.36%)
Carb: 52 g (80.82%)
Fat: 6 g (8.82%)
Fiber: 3 g
Calories: 287


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *