Cucumber Carrot Salad |வெள்ளரி கேரட் சாலட்

வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமான, 111 கலோரி கொண்ட குக்கும்பர் கேரட் சாலட், இதுல 4 g புரோட்டின் இருக்கு,  இத மார்னிங் ஸ்னாக்ஸ்  அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா எடுத்துக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளரி – 100 கிராம் (நறுக்கியது)
  • வெங்காயம் – 30 கிராம் (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 30 கிராம் (பொடியாக நறுக்கியது)
  • கேரட் – 30 கிராம் (துருவியது)
  • புதினா – சிறிதளவு 
  • கொத்தமல்லி – சிறிதளவு 
  • ஆர்கானோ – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1/4  டீஸ்பூன்
  • பெப்பர் பவுடர் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

  1. ஒரு மிக்ஸிங் பௌலில் வெள்ளரி, வெங்காயம், தக்காளி, கேரட், புதினா, கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்.
  2. அடுத்து ஆர்கானோ, உப்பு, பெப்பர் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. சுவையான குக்கும்பர் கேரட் சாலட் தயார்.

சத்தான குக்கும்பர் கேரட் சாலட்

வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த சாலட்டில் கலோரிகள் குறைவாக உள்ளன, எனவே எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Total Macro
Protein: 4 g (13.64%)
Carb: 21 g (81.79%)
Fat: 1 g (4.57%)
Fiber: 10 g
Calories: 111


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *