643 கலோரில 32g ப்ரோட்டீன் இருக்க ஒரு சிம்பிளான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி, இந்த பிரவுன் பிரட் பன்னீர் சாண்ட்விச் ஹெல்த்தியானது மட்டுமல்ல, சுவையாகவும் இருக்கும். பிரவுன் பிரெட்டில் உள்ள ஃபைபர் செரிமானத்திற்கும், எடையை குறைப்பதற்கும் உதவும்.
பிரவுன் பிரட் பன்னீர் சாண்ட்விச் செய்முறை
தேவையான பொருட்கள்
- பன்னீர் – 100 கிராம், துருவியது
- குடமிளகாய் – 15 கிராம், நறுக்கியது
- கேரட் – 25 கிராம், துருவியது
- வெங்காயம் – 20 கிராம், நறுக்கியது
- சில்லி ஃபிளக்ஸ் – 1/2 டீஸ்பூன்
- ஆர்கானோ – 1 டீஸ்பூன்
- சாட் மசாலா – 1 டீஸ்பூன்
- பெப்பர் பவுடர் – 1 டீஸ்பூன்
- உப்பு – 1/4 டீஸ்பூன்
- டொமேட்டோ சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- பிரவுன் பிரெட் – 2 துண்டுகள்
- புதினா சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- ஒரு மிக்ஸிங் பௌலில் துருவிய பன்னீர், நறுக்கிய குடமிளகாய், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், சில்லி ஃபிளக்ஸ், ஆர்கானோ, சாட் மசாலா, பெப்பர் பவுடர், உப்பு, டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இரண்டு பிரவுன் பிரெட்டில் ஒவ்வொன்றிலும் ஒரு பக்கத்தில் புதினா சட்னி ஸ்ப்ரேட் செய்து அதன் மீது பன்னீர் கலவையை தடவவும்.
- மற்றொரு துண்டு பிரெட்டில், டொமாட்டோ சாஸ் தடவி அந்த பிரெட் மீது மூடி, நன்கு அழுத்தவும்.
- பிரவுன் பிரட் பன்னீர் சாண்ட்விச் தயார்.
குறிப்புகள்
- புதினா சட்னிக்கு பதிலாக வேறு ஏதாவது சட்னி அல்லது சாஸ் பயன்படுத்தலாம்.
- பிரவுன் பிரெட்க்கு பதிலாக வெள்ளை பிரெட் பயன்படுத்தலாம்.
சத்தான பிரவுன் பிரட் பன்னீர் சாண்ட்விச்
பிரவுன் பிரெட்டில் உள்ள ஃபைபர் செரிமானத்திற்கும், எடையை குறைப்பதற்கும் உதவும். பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குடமிளகாய், கேரட், வெங்காயம் போன்ற காய்கறிகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. சில்லி ஃபிளக்ஸ், ஆர்கானோ, சாட் மசாலா போன்ற மசாலாக்கள் சாண்ட்விச்சிற்கு சுவையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் சேர்க்கின்றன.
Total Macro
Protein: 32 g (24.55%)
Carb: 72 g (55.66%)
Fat: 25 g (19.79%)
Fiber: 14 g
Calories: 643

Leave a Reply