Rajma Salad |ராஜ்மா சாலட்

256 கலோரில 13 g புரோட்டின் இருக்க சாலட் ரெசிபி தான் இன்னைக்கு பாக்க போறோம், புரோட்டின் லெவல்ல அதிகரிக்க இது ரொம்பவே ஹெல்ப் பண்ணும்.

தேவையான பொருட்கள்:

  • ராஜ்மா – 25 கிராம்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • வேர்க்கடலை – 15 கிராம் (வறுத்தது)
  • சில்லி ஃபிளேக்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
  • சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்
  • சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – 1/2 

செய்முறை:

  1. 6 மணி நேரம் ஊறவைத்த ராஜ்மாவை, வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. வேக வைத்த ராஜ்மாவை ஒரு மிக்ஸிங் பௌலில் போட்டு, வெங்காயம், வேர்க்கடலை, சில்லி ஃபிளேக்ஸ், சீரகப்பொடி, சாட் மசாலா, மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  3. கலந்த சாலட்டை ஒரு பவுலில் பரிமாறவும்.

இந்த சாலட் கூடவே துருவிய கேரட் சேர்த்தும் சாப்பிடலாம்,

Total Macro
Protein: 13 g (24.59%)
Carb: 29 g (56.74%)
Fat: 10 g (18.67%)
Fiber: 11 g
Calories: 256


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *