Oats dosa |ஓட்ஸ் தோசை

251 கலோரில 8 g  புரோட்டின் இருக்க மாதிரி ரொம்பவே ஈஸியான ஒரு பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி தான் பாக்க போறோம், ஓட்ஸ் பிடிக்காதவங்க கூட இதுபோல செஞ்சு சாப்பிடலாம் ரொம்ப ஹெல்தியும் கூட

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் – 50 கிராம்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – சிறிதளவு ( நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 

செய்முறை:

  1. ஒரு பௌலில் ஓட்ஸ் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்த ஓட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவை ஒரு மிக்ஸிங் பௌலில் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  4. தோசைக்கல்லை சூடாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி மாவு ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, இருபுறமும்  வேக வைக்கவும்.
  5. சுவையான ஓட்ஸ் தோசை தயார்.

இந்த ஓட்ஸ் தோசைக்கு சைடிஷா ராஜ்மா கிரேவி, பச்சை பட்டாணி மசாலா, பச்சை பயிறு கிரேவி இதுபோல எடுத்துக்கிட்டா சூப்பராவும் இருக்கும் இன்னும் அதிகமான புரோட்டினும் நமக்கு கிடைக்கும்.

Total Macro
Protein: 8 g (14.59%)
Carb: 35 g (68.16%)
Fat: 9 g (17.24%)
Fiber: 6 g
Calories: 251


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *