Mushroom Paneer Stir Fry | காளான் பன்னீர் வறுவல்

314 கலோரில ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான 15g புரோடின் இருக்க டிஷ் தான் இந்த காளான் பன்னீர் வறுவல்,

தேவையான பொருட்கள்:

  • காளான் – 50 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • பன்னீர் – 50 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, பூண்டு, இஞ்சி,வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. அதில் நறுக்கிய காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, காளான் நன்கு வெந்ததும், பன்னீர் சேர்த்து கிளறி விடவும்.
  5. இறுதியாக, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

இந்த காளான் பன்னீர் வறுவல் அதிகளவு புரோட்டின் நிறைந்த உணவு. இது வெயிட் லாஸ்க்கு ஏற்றது.

Total Macro
Protein: 15 g (27.59%)
Carb: 22 g (39.22%)
Fat: 18 g (33.19%)
Fiber: 8 g
Calories: 314


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *