Kambu Dosa | கம்பு தோசை

345 கலோரில 9g  புரோட்டின் இருக்கிற  ரொம்பவே ஹெல்தியான டிபன் ரெசிபி தான் பாக்க போறோம், நார்மலா நம்ம எடுக்குற தோசைக்கு பதிலா ஒரு நாள் இந்த கம்பு தோசை ட்ரை பண்ணி பாருங்க

தேவையான பொருட்கள்:

  • கம்பு மாவு – 1 கப்
  • அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
  • தயிர் – 50 கிராம்
  • உப்பு – 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 

செய்முறை:

  1. ஒரு பௌலில் கம்பு மாவு, அரிசி மாவு, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  3. தோசைக்கல் சூடானதும், கரைத்து வைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி, தேங்காய் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைக்கவும்.
  4. அருமையான,சுவையான கம்பு தோசை தயார்.

சுவை கூட்ட சில குறிப்புகள்:

  • தோசைக்கு, வேர்க்கடலை சட்னி அல்லது தக்காளி சட்னி சேர்த்து பரிமாறலாம்.
  • தோசை உடன், தயிரை சேர்த்து சாப்பிடலாம்.

இந்த கம்பு தோசை ஒரு லோ கலரி, ஹை புரோட்டின் உணவு. இது வெயிட் லாஸ்க்கு ஏற்றது.

Total Macro
Protein: 9 g (11.96%)
Carb: 55 g (74.72%)
Fat: 10 g (13.32%)
Fiber: 6 g
Calories: 345


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *