352 கலோரில 16 g புரோட்டின் வர மாதிரி சப்பாத்தி, இட்லி, போன்ற பிரேக்ஃபாஸ்ட் மட்டும் இல்லாம ரைஸ் கூடவும் யூஸ் பண்ற மாதிரி இருக்கக்கூடிய ஒரு டிஷ் தான் இந்த பச்சை பட்டாணி பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள்:
- பன்னீர் – 50 கிராம் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)
- பச்சை பட்டாணி – 25 கிராம் (வேக வைத்தது)
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – சிறு துண்டு( நறுக்கியது)
- பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
- முந்திரி பருப்பு – 15 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
- ஒரு கடாயில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதக்கிய வெங்காயம், தக்காளி கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, சோம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வதக்கிய சோம்பு, பச்சை மிளகாய் கலவையில் பேஸ்ட் செய்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- கொதித்ததும், வேக வைத்த பச்சை பட்டாணி மற்றும் வதக்கி வைத்த பன்னீர் சேர்த்து கிளறி விடவும்.
- இறுதியாக, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
இந்த பச்சை பட்டாணி பன்னீர் கிரேவி ஒரு லோ கலரி, ஹை புரோட்டின் உணவு. இது வெயிட் லாஸ்க்கு ஏற்றது.
Total Macro
Protein: 16 g (28.04%)
Carb: 15 g (27.35%)
Fat: 25 g (44.62%)
Fiber: 5 g
Calories: 352

Leave a Reply