367 கலோரில 16g புரோடின் வரமாதிரி ரொம்பவே ஈஸியான ஒரு பிரேக்பாஸ்ட் ரெசிபி, இத ஸ்னாக்ஸாவும் எடுத்துக்கலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான பசான் பிரெட் டோஸ்ட்.
தேவையான பொருட்கள்:
- பிரட் – 2 துண்டுகள்
- கடலை மாவு – 50 கிராம்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி – சிறிதளவு
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- ஒரு தோசைக்கல் அல்லது வாணலியில் எண்ணெய் தடவி, அதில் பேஸ்ட் செய்த மாவை பிரட் துண்டுகளின் இரண்டு பக்கமும் நனைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும்.
- சூடாக பரிமாறவும்.
Total Macro
Protein: 16 g (20.29%)
Carb: 56 g (68.98%)
Fat: 9 g (10.73%)
Fiber: 9 g
Calories: 367

Leave a Reply