Protein Milk | புரத பால்

“575 காலோரி, 23g புரோட்டீன் உள்ள சூப்பரான புரோட்டின் மில்க் – மார்னிங் டீக்கு பதிலா இந்த புரோட்டின் மில்கை ஒரு நாள் ட்ரை செய்து பாருங்க, இது வெயிட் லாஸ்க்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணும்.”

ஹோம்மேட் புரோட்டின் மில்க் செய்முறை

தேவையான பொருட்கள்:

  • பாதாம் பருப்பு – 15 கிராம்பாதாம் பருப்பு
  • பிஸ்தா பருப்பு – 15 கிராம்
  • முந்திரி பருப்பு – 15 கிராம்
  • பூசணி விதை – 15 கிராம்
  • ஏலக்காய் – 2
  • பால் – 200 மில்லி

செய்முறை:

  1. ஒரு வாணலியில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு, பூசணி விதை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த நட்ஸ் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  4. பால் நன்கு கொதித்ததும், அரைத்து வைத்த நட்ஸ் கலவையை சேர்த்து கிளறி விடவும்.
  5. 5 நிமிடம் கொதித்த பின், அடுப்பை அணைத்து வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

இந்த புரோட்டின் மில்க் கண்டிப்பாக உங்கள் வெயிட் லாஸ்க்கு சப்போர்ட்டிவாக இருக்கும்.

Total Macro
Protein: 23 g (24.94%)
Carb: 25 g (27.85%)
Fat: 43 g (47.21%)
Fiber: 7 g
Calories: 575


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *