வெறும் 294 கலோரில 8g புரோட்டீன் கொண்ட ஒரு சுவையான புரோட்டின் பேன் கேக், பொதுவா வெயிட் லாஸ் செய்யும் போது ஸ்வீட்ஸ் சாப்பிடக்கூடாது, அதுக்கு பதிலா இந்த பேன் கேக்கை ட்ரை பண்ணி பாருங்க
தேவையான பொருட்கள்:
- பச்சை வாழைப்பழம் – 1 (மீடியம் சைஸ்)
- நட்ஸ் மிக்ஸ் – 1 – 1/2ஸ்பூன்
- கோதுமை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு மீடியம் சைஸ் பச்சை வாழைப்பழத்தை நறுக்கி, நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- நட்ஸ் மிக்ஸ் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து, மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், சிறு சிறு வட்டங்களாக மாவு ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேக வைக்கவும்.
- சுவையான புரோட்டின் பேன் கேக் தயார்.
இது ரொம்ப டேஸ்ட்டியான ஒரு ஸ்னாக்ஸ் மட்டுமில்ல ரொம்பவே ஹெல்தியும் கூட ட்ரை பண்ணி பாருங்க.
Total Macro
Protein: 8 g (12.35%)
Carb: 52 g (79.1%)
Fat: 6 g (8.55%)
Fiber: 7 g
Calories: 294

Leave a Reply