Makhana Smoothie | மக்கானா ஸ்மூத்தி

11g ஃபைபரோட 14g புரோடினும் உள்ள ஒரு ஹெல்தியானா ஸமூத்தி ரெசிபி, இதோட கலோரி 435 தான்,இந்த மக்கானா ஸ்மூத்தி ரெசிபி உடல் எடையை குறைக்க உதவுகிறது

தேவையான பொருட்கள்:

  • மக்கானா – 20 கிராம்
  • வறுத்த வேர்க்கடலை – 15 கிராம்
  • பாதாம் பருப்பு – 4
  • பேரிச்சம்பழம் – 5
  • ஆப்பிள் – 1 (நறுக்கியது  )
  • வாழைப்பழம் – 1  (நறுக்கியது  )
  • காய்ச்சிய பால் – 150 மிலி
  • ஊறவைத்த சியா சீட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  1. ஒரு மிக்ஸி ஜாரில் மக்கானா, வறுத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் காய்ச்சிய பால்  சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. ஒரு கிளாஸில் ஊற வைத்த சியா சீட்ஸ் சேர்த்து, அரைத்த ஸ்மூத்தியை ஊற்றி,சிறிதளவு மக்கானா, வேர்க்கடலை, பாதாம் பருப்பு தூவினால் சுவையான மக்கானா ஸ்மூத்தி ரெடி.  

உடல் எடையை குறைக்க ஏற்றது ஏன்?

  • மக்கானா அதிக புரதத்தால் ஆனது. புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
  • மக்கானா குறைந்த கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்டது.
  • மக்கானா நார்ச்சத்து கொண்டது. நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பசியை கட்டுப்படுத்துகிறது.

Total Macro
Protein: 14 g (16.59%)
Carb: 51 g (60.51%)
Fat: 19 g (22.89%)
Fiber: 11 g
Calories: 435


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *