27g புரோட்டீன் இருக்க மார்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி, வெயிட் லாஸ்க்கு ஏற்ற உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட், இதோட கலோரி 513 இருக்கதால இத நைட் டின்னர்க்கும் எடுத்துக்கலாம்,
- குறைந்த அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட்
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 1 (நீட்டமாக நறுக்கியது)
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- முட்டை – 3
- தேங்காய் எண்ணெய் – 1Tbsp
- மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- ஆர்கானோ – 1/2 டீஸ்பூன்
- சீஸ் – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
- உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- ஒரு பௌலில் முட்டை, ஆர்கானோ, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- வதக்கிய உருளைக்கிழங்கு கலவையை முட்டை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்த முட்டை கலவையை ஊற்றி,சீஸ் சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு வேக வைக்கவும்.
- சுவையான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட் தயார்.
வெறும் வெங்காயம் மட்டுமே சேர்த்து ஆம்லேட் செய்றதுக்கு பதிலா, இப்டி ஒரு தடவை டிரை பண்ணுங்க டேஸ்ட் வேரலெவல்ல இருக்கும்.
Total Macro
Protein: 27 g (30.43%)
Carb: 32 g (35.65%)
Fat: 31 g (33.93%)
Fiber: 9 g
Calories: 513

Leave a Reply