463 கலோரி ல, 15g புரோட்டீன் இருக்க ஒரு சூப்பரான பயோடின் ட்ரிங்க்,மார்னிங் பிரேக்பாஸ்ட் எடுத்துக்காதவங்ககூட இத குடிச்சாலே போதும்.
தேவையான பொருட்கள்:
- முந்திரி பருப்பு – 5கிராம்
- பாதாம் பருப்பு – 5கிராம்
- வால்நட் – 3
- வேர்க்கடலை – 10கிராம்
- வெள்ளை எள்ளு – 10 கிராம்
- பேரிச்சம் பழம் – 5
- சியா விதைகள் – 1 டீஸ்பூன்
- ஆளி விதைகள் – 1 டீஸ்பூன்
- பூசணி விதைகள்- 10 g
- வாழைப்பழம் – 1
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பௌலில் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, வால்நட், சூரியகாந்தி விதைகள், பாகற்காய் விதைகள், வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, பேரிச்சம் பழம், சியா விதைகள், ஆளி விதைகள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு, இந்த நட்ஸ் மற்றும் விதைகளை ஒரு கிளாஸில் சேர்த்து, வாழைப்பழத்தை நறுக்கி சேர்க்கவும்.
- இதை ஒரு ஹேண்ட் பிளெண்டர் பயன்படுத்தி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இந்த ட்ரிங்கை ஒரு கிளாஸில் ஊற்றி, மேலே ஆளி விதைகள் தூவி பரிமாறவும்.
பயோடின் ட்ரிங்கின் நன்மைகள்:
- இந்த ட்ரிங்க் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது.
- இது ஹார்மோன் சுரப்பை சீராக வைக்கிறது.
- இது சோர்வை போக்குகிறது.
நீங்களும் இந்த ட்ரிங்கை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு பிடிக்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் இது ரொம்பவே நல்லது
Total Macro
Protein: 15 g (18.52%)
Carb: 34 g (43.73%)
Fat: 30 g (37.75%)
Fiber: 13 g
Calories: 463

Leave a Reply