BESAN DOSA | கடலைமாவு தோசை

361 கலோரில ரொம்ப ஈஸியா வீட்ல இருக்க பொருட்களை வைத்துசெய்யக்கூடிய இந்த டிபன் ரெசிபி, இதுல 16g புரோடீன் இருக்கு,

வெயிட் லாஸ்க்கு ஏற்ற கடலை மாவு தோசை

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 50 கிராம்
  • ரவை – 25 கிராம்
  • தயிர் – 30 கிராம்
  • சீரகம் – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 1 tabp

செய்முறை:

  1. ஒரு பௌலில் கடலை மாவு, ரவை, தயிர், சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாம கரைத்து கொள்ளவும்.
  3. ஒரு தோசை கல்லை சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை தோசை ஊற்றி, இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  4. தோசைக்கு மேலே தேங்காய் எண்ணெய் ஊற்றி பரிமாறவும்.

கடலை மாவு தோசைக்கூடவே சிக்கன் கிரேவி எடுத்தா ஒரு சூப்பாரான மார்னிங் புரோடீன் ரிச் டிபன் தயார்.

Total Macro
Protein: 16 g (20.42%)
Carb: 50 g (65.09%)
Fat: 11 g (14.5%)
Fiber: 9 g
Calories: 361


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *