Aval Upma | அவல் உப்மா

வெயிட் லாஸ்க்கு ஏற்ற அவல் உப்புமா வெறும் 266 கலோரி ல சூப்பாரான மார்னிங், ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி, 7g புரோடீனும் இதுல இருக்கு

தேவையான பொருட்கள்:

  • வெள்ளை அவல் – 25 கிராம்
  • வெங்காயம் – 1 (பொடியாக  நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு 
  • தேங்காய்  எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு  – சிறிதளவு 
  • வேர்க்கடலை – 15 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. ஒரு பௌலில் வெள்ளை அவலை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் தேங்காய்  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வேர்க்கடலை. மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  4. ஊற வைத்த அவலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  6. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

இதுகூடவே சோயா ஃப்ரை, பன்னீர் ஃப்ரை எடுத்தா புரோடீன் வேல்யூவும் அதிகமாகும்

Total Macro
Protein: 7 g (14.54%)
Carb: 27 g (56.14%)
Fat: 14 g (29.32%)
Fiber: 3 g
Calories: 266


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *